Top Ad unit 728 × 90

Breaking News

random

ஓகஸ்ட் 5 ஆம் திகதி எமது கட்சி வரலாற்று வெற்றியைப் பெறும் – மஹிந்தானந்த


எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வெற்றியை பெறும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு மக்களால் ஆணை வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

எந்தவொரு அரசியல் பிளவுகளும் இல்லாமல், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட முயற்சிகளை அனைவரும் ஒன்றிணைத்து ஆதரிக்க வேண்டும் என்பதனை மக்கள் தெளிவாக அறிந்துள்ளனர் என குறிப்பிட்டார்.
ஓகஸ்ட் 5 ஆம் திகதி எமது கட்சி வரலாற்று வெற்றியைப் பெறும் – மஹிந்தானந்த Reviewed by EBC Tamil on 20:25:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.