Top Ad unit 728 × 90

Breaking News

random

குவிக்கப்பட்டுள்ள படைகள்! கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது நல்லூரானின் உற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க அலங்காரக்கந்தனின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று (24) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் அலங்காரவேலுக்கும், வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், நல்லூர்கந்தனுக்கும் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள், ஆராதனைகள் என்ப இடம்பெற்று பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளி கொடியேற்ற பீடத்திற்கு வந்தடைந்தனர்.

சுப மூர்த்த 10 மணியளவில் மேளதாள, வாத்தியங்கள் முழங்க, அந்தனர்சிவாச்சாரியர்களின் வேதபாராயணம் ஓத ஆலயபிரதம குரு சிவஸ்ரீ அ.வைகுந்தன் தலைமையில் அலங்காரகந்தனின் மஹோற்சவ கொடியேற்றம் ஏற்றிவைக்கப்பட்டது.

25 நாட்கள் இடம்பெறும் மஹோற்சவத்தில் 03.08 மாலை திருமஞ்சத் திருவிழாவும், 12.08 காலை சூர்யோற்சவம் திருவிழாவும் மாலை கார்த்திகை உற்சவமும், 13.08 சந்தானகோபாலர் உற்சவமும், 13.08 மாலை கைலாசவாகனமும், 14.08 மாலை வேல்விமானமும், 15.08 தெண்டாயுதபாணி உற்சவம், 15.08 மாலை ஒருமுகத்திரு விழாவும்,
16.08 சம்பரமும், 17.08 தேர்த்திருவிழாவும், 18.08 அன்று காலை தீர்த் திருவிழாவும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே ஆலயத்தின் மஹோற்சவ நிறைவடையும்.

நாட்டில் ஏற்பட்டுயிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக சுமார் 300 பேர்கள் பக்திபூர்வமாக கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுப்பட்டனர். அத்துடன் சமூக இடைவெளியினையும் கருத்தில் கொண்டு செயற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலும் யாழ் மாநகர பொதுச் சுகாதாரப் பணியாளர்களால் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வூட்டும் சமூக செயற்பாட்டில் ஈடுப்பட்டுக் கொண்டுயிருக்கின்றனர்.

மேலும், யாழ்ப்பாண பொலிஸாரால் பக்தர்களின் நலன் கருதி ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் தேசிய அடையாள அட்டையினை சிசிரி ஒளிப்படம் மூலம் காண்பிக்கப்பட்ட பின்னர் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றும் ஒவ்வொரு பக்தர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று பொலிஸாரினால் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலய சுற்றுப்பிரகாரம் அன்னதானம், தாக சாந்தி நிலையம், சமய சொற்பொழிவுகள், சிறுவர் பொழுதுபோக்கு நிகழ்வுகள், என்னவை நடாத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய கடைத்தொகுதிகள் அமைத்து வியாபாரம் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குவிக்கப்பட்டுள்ள படைகள்! கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின்றது நல்லூரானின் உற்சவம் Reviewed by admin on 12:40:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.