வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த இலங்கை தமிழர்! மனைவி செய்த அதிர்ச்சி செயல்
தமிழகத்தில் இலங்கை தமிழரை நள்ளிரவில் அவர் மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உச்சப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் சிவன்ராஜ் (47). இவர் மனைவி கேத்தீஸ்வரி.
இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சிவன்ராஜிற்கு சென்னையில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதோடு சிவன்ராஜ் செல்போன் மூலம் பல பெண்களிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இது தொடர்பாக அவருக்கும், கேத்தீஸ்வரிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அன்றிரவு இருவரும் தூங்கச் சென்றுவிட்டனா். பின்னா், நள்ளிரவு 1 மணியளவில் கேத்தீஸ்வரி எழுந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவா் தலையில் கிரைண்டா் கல்லைத் தூக்கிப் போட்டுள்ளாா்.
இதில் இரத்த வெள்ளத்தில் அலறி துடித்து பலத்த காயமடைந்த சிவன்ராஜை, அக்கம் பக்கத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிவன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து சிவன்ராஜ் மனைவி கேத்தீஸ்வரியை கைது செய்துள்ளனர், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த இலங்கை தமிழர்! மனைவி செய்த அதிர்ச்சி செயல்
Reviewed by admin
on
08:31:00
Rating:

No comments: