Top Ad unit 728 × 90

Breaking News

random

மாணவன் ஒருவனுக்கு கொறோனா தொற்று சந்தேகத்தில் 90 பேர் தனிமைப்படுத்தல்...

 பொலன்னறுவை ராஜாங்கன பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனுக்கு 

கொறோனா தொற்று சந்தேகத்தில் 90 பேர் சுய தனிமைப்படுத்த லுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் முதலில் அடையாளங் காணப்பட்ட கொரோனா நோயாளியின் வீட்டிற்கு முன்பாக உள்ள இல்லத்தில் வசித்தவரே இவ்வாறு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.


ராஜாங்கன பிரதேசத்தில் 102 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் 101 பேருக்கு தொற்று உறுதியாகவில்லை என்ற போதிலும் ஒருவருக்கே மேற்படி தொற்று ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்க படுவதாகவும்  
, அவர் தற்சமயம் சிறிசெவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ராஜாங்கன பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் சந்தியா அபேரத்ன தெரிவித்தார்.



இந்நிலையில் குறித்த மாணவர் கல்விபயிலும் ராஜாங்கன நவோத்தியா பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


அத்துடன் , ஏனைய பாடசாலைகளின் நிலைமை குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவன் ஒருவனுக்கு கொறோனா தொற்று சந்தேகத்தில் 90 பேர் தனிமைப்படுத்தல்... Reviewed by TAMIL on 19:51:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.