Top Ad unit 728 × 90

Breaking News

random

புதிய வரை படம்:இந்தியாவை சீண்டும் நேபாளம்

சீனாவுடன் போர்பதற்றம் நிலவி வரும் சூழ் நிலையில் மறுபக்கம் இந்தியாவை ஆத்திரமூட்டும் செயல்களை உண்டு பண்ணி வருகின்றது நேபாளம்.

இந்திய பகுதிகளை உள்ளடக்கி புதுப்பித்துள்ள வரைபடத்தை சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாளம் திட்டமிட்டுள்ளது. உத்ரகாண்டில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கி, கடந்த மே மாதத்தில் நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது.

இது அடிப்படை ஆதாரமற்றது, இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு முரணானது என இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட வரைபடத்தை இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, கூகுள் மற்றும் சர்வதேச சமூகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என நேபாளம் அறிவித்துள்ளது.

பாக்கிஸ்தான்,சீனா என்று எல்லை பிரச்சினைகளால் முகம் கொடுத்து வரும் இந்தியா தற்போது நேபாளத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்வினையாற்ற வேண்டிய தேவைக்குள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய வரை படம்:இந்தியாவை சீண்டும் நேபாளம் Reviewed by Thilaks on 10:41:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.