Top Ad unit 728 × 90

Breaking News

random

நிர்வாண நிலையில் கிடந்த காதலன்!... காதலியின் குடும்பம் குற்றவாளிகளா?

தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரியின் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி.. பெங்களூரில் காய்கறி மற்றும் சிப்ஸ் வியாபாரம் செய்து வந்த விஜிக்கும், அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உறவுக்கார பெண்ணான ராஜேஸ்வரி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இவர்களது காதலுக்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், எனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

திருமணமாகி அடுத்த நாள் ஊருக்கு வந்த தம்பதியை பஞ்சாயத்தை வைத்து அழைத்து பேசிய குடும்பத்தினர், முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

அத்துடன் ராஜேஸ்வரியையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர், இதற்கிடையே கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளனர்.

மேலும் கடந்த 31ம் திகதி சொந்தமாக தொழில் தொடங்கலாம் என கூறி பேச வருமாறு விஜியை ராஜேஸ்வரியின் தந்தை அழைத்துள்ளதாக தெரிகிறது.

விஜியும் அங்கு சென்ற நிலையில் மறுநாள் சாலையில் அரை நிர்வாணமாக சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

யாரோ கொலை செய்து அவரின் சடலத்தை வீசிச் சென்றிருப்பதாக பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர், இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
நிர்வாண நிலையில் கிடந்த காதலன்!... காதலியின் குடும்பம் குற்றவாளிகளா? Reviewed by admin on 09:40:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.