Top Ad unit 728 × 90

Breaking News

random

துஸ்பிரயோகத்துக்கு முயற்சித்தவர் நையப்புடைப்பு: வாகரையில் சம்பவம்

குடும்ப பெண்ணை பலாத்காரத்திற்குட்படுத்தி  கொலை செய்ய முயற்சித்த 22வயது மதிக்கத்தக்க பிறைத்துறைச்சேனையைச் சேர்ந்த இளைஞனை பொது மக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்தனர். 

மட்டக்களப்பு
 வாகரை பால்சேனையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 23வயது பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் வாழைச்சேனைக்கு பொருட்கள் வாங்க வந்த சமயத்தில்  வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள மலசலகூடத்திற்கு சென்றுள்ளார்.

குறித்த பெண்  மலசலகூடத்திற்குள் சென்றதும் அந்த இளைஞன் பின்தொடர்ந்து சென்று துஸ்பிரயோகம் செய்ய முயன்றபோது இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது.

இளைஞனை தாக்கி உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். எனினும் அந்த பகுதியில் எவரும் இருக்கவில்லை.

பெண்ணைத் தாக்கி அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார்.
சத்தம் கேட்டு அயல்வீட்டிலிருந்த பெண்ணொருவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவரது கணவர் இன்னொருவருடன் வந்து கதவைத் தட்டியபோது இளைஞன் எட்டிப்பார்த்து வயிறு வலிக்கிறது,அவசரம் என அப்பாவியாகக்கூறி கதவை மீண்டும் தாளிட்டான்

சந்தேகமடைந்த இருவரும் கதவை எட்டி உதைத்தனர்
இளம்பெண் வாயில் நுரைதள்ளியபடி மயங்கமடைந்திருந்தார் , உடனடியாக பெண் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள அதே நேரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
துஸ்பிரயோகத்துக்கு முயற்சித்தவர் நையப்புடைப்பு: வாகரையில் சம்பவம் Reviewed by Thilaks on 15:56:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.