Top Ad unit 728 × 90

Breaking News

random

இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி லக்ஸ்மி ராம கிருஷ்ணனுக்கு நோட்டீஸ்..

 

சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலமாக பேசப்படும் நபர் நடிகை வனிதா


பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை வனிதா அண்மையில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார்.


இந்த திருமணத்தை ஆதரித்து சிலரும் எதிர்த்து பலரும் சமூக வலைத்தளங்களில் களம் இறங்கினர்.


பீட்டர் பாலின் முதல் மனைவி கூட பீட்டர்பால் உரிய விவாகரத்து தன்னிடம் வாங்கவில்லை அவர் தொடர்ந்தும் தனக்குத்தான் சொந்தம் நடந்து முடிந்த கலியாணம் செல்லாது என்று குற்றம் சுமத்தி வந்தார்.


தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு கூறி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நடிகை வனிதா விஜயகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


யூடியுப் சேனலில் இடம்பெற்ற விவாதத்தில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத வனிதா ஒருமையில் கடிந்து கொண்டார் இதனால் இருவருக்கும் வார்த்தை போர் முற்றியது.

இதனைத் தொடர்ந்து தன்னை தரக்குறைவாக பேசியதாகக் குறிப்பிட்டு, வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் தற்போது வனிதாவும் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி லக்ஸ்மி ராம கிருஷ்ணனுக்கு நோட்டீஸ்.. Reviewed by Thilaks on 07:54:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.