Top Ad unit 728 × 90

Breaking News

random

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயாரின் இரண்டாவது கணவர்!

 நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பட்டத்தையன்குட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வருகிறார்.


 இவரது தாயார் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரை திருமணம் செய்து கொண்டார்.


கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி சிறுமியின் தாயார் வேலைக்கு சென்ற பிறகு, சிறுமி மட்டும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தாயாரின் 2வது கணவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.



அடுத்து சிறுமி வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தனது தாயிடம் நடந்த சம்பவம் குறித்து அழுதபடி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், தனது கணவனே மகளை பாலியல் வன்கொடுமை செய்ததை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி டிரைவர் பரமநாதனை போக்சோ சட்ட்த்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயாரின் இரண்டாவது கணவர்! Reviewed by Thilaks on 21:22:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.