Top Ad unit 728 × 90

Breaking News

random

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை: 14% தன்னார்வலர்களுக்கு பக்கவிளைவுகள்!

 உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி அறிவித்தது. ”ஸ்புட்னிக்- V' என பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியை தனது மகளுக்கும்  செலுத்தி பரிசோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்தார். ரஷ்யாவின் தடுப்பூசி அறிவிப்புக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பரிசோதனை கட்டத்திலேயே, அதிகாரப்பூர்வ அனுமதி அளிப்பது ஆபத்தானது என எச்சரித்தனர்.


இந்நிலையில் 'ஸ்புட்னிக்-V' தடுப்பூசி பெறப்பட்ட தன்னார்வலர்களில் 14% பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் ஏழு பேரில் ஒருவருக்கும் தசை வலி, சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்கள் கணித்த பக்கவிளைவுகளே ஏற்படுவதாகவும், இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் சரியாகி விடுவதாகவும் விளக்கமளித்துள்ளது.


ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை: 14% தன்னார்வலர்களுக்கு பக்கவிளைவுகள்! Reviewed by Thilaks on 11:53:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.