Top Ad unit 728 × 90

Breaking News

random

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்கள்.. 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்!

 தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த 19 வயதுடைய யாஷீர்,பெங்களூருவைச் சேர்ந்த 26 வயதுடைய இர்பானும் தமது சகோதரிகளுடன் நேற்று முன்தினம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றனர்.


ஆற்றில் நீரின் அளவு அதிகரித்து இருந்தமையால் இருவரும் நீரோடு அடித்துச் செல்லப்பட்டனர்.


இதைக் கண்ட சகோதரிகள் கூக்குரலிடவே அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்த பொதுமக்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்ற கடும் முயற்சி செய்தனர்.


தண்ணீரில் வேகமாக அடித்து செல்லப்பட்டதால் அவர்களால் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை.


சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள்  கடும் தேடுதலை மேற்கொண்டனர் .


தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில் நேற்றுமுன்தினம் ஜாஷீரின் உடலை கண்டுபிடித்தனர்.


இர்பானை தேடும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது


ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர்கள்.. 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்! Reviewed by Thilaks on 18:19:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.