Top Ad unit 728 × 90

Breaking News

random

அத்துமீறி காணியடைப்பு:பெண்மீது வாள்வெட்டு

 புன்னாலைக்கட்டுவன் வடக்கு  ஈவினையை சேர்ந்த செல்லத்துரை  சந்திரலீலா அப்பகுதியில் தனியாக வசித்து வருகின்றார்.


   அதே பகுதியை சேர்ந்த சிலர் செல்லத்துரை சந்திரலீலாவிற்கு சொந்தமான காணியை அத்துமீறி வேலியடைப்பதற்காக முனைந்துள்ளனர்.


  சம்பவத்தை தடுத்து நிறுத்த முற்பட்டவேளை சந்திரலீலா மீது குறித்த கும்பலால் மோசமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பாக சுண்ணாகம் பொலிஸாரிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென குறித்த பெண் கவலை வெளியிட்டுள்ளார்.


சட்டவிரோதமாக மீண்டும் தனக்கேயுரிய காணியை அவர்கள் அத்துமீறி அடைக்க முனைவதாகவும்,தனியாக வசித்துவரும் தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக சுண்ணாகம் பொலிஸாரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதனை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


    பெண்கள் மீது தொடரும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அத்துமீறி காணியடைப்பு:பெண்மீது வாள்வெட்டு Reviewed by Thilaks on 10:49:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.