Top Ad unit 728 × 90

Breaking News

random

காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் நரசிம்ம மூர்த்தி(56). இவர் தனது மனைவி மகளுடன் கீழ்ப்பாக்கம் காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.  இவருடைய மூத்த மகளுக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியே வசித்து வருகிறார். நரசிம்ம மூர்த்திக்கு அயப்பாக்கத்தில் சொந்தமாக வீடு உள்ளது. கொரோனா காலத்தில் குடும்பத்துடன் அயப்பாக்கத்தில் வசித்து வந்துள்ளனர். இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததால் அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.


மது அருந்தக்கூடாது என மருத்துவர்கள்  அறிவுறுத்தி இருந்த நிலையில் நரசிம்ம மூர்த்தி மீண்டும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அயப்பாக்கத்தில் இருந்து ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கம் குடியிருப்புக்கு வந்த நரசிம்ம மூர்த்தி 12 மணியளவில் மனைவிக்கு செல்போன் மூலம் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்து விட்டு மின்விசிறியில்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 


அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை Reviewed by Thilaks on 21:42:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.