Top Ad unit 728 × 90

Breaking News

random

கட்டிய தாலியைக் கழற்றிய காதலி: புதுமாப்பிள்ளை தற்கொலை

 கோவை மாவட்டம் பேரூரை அடுத்த சென்னனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மஞ்சுளாதேவி என்பவரும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதிக்காததால் நண்பர்கள் முன்னிலையில் சுண்டக்காமுத்தூர் கருப்பராயன் கோவிலில் வைத்து இருவரும் கடந்த 4 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.



 பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில் கடந்த 7 ஆம் தேதி போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தம்பதி இருவரையும் பேச்சுவாரத்தைக்கு அழைத்துள்ளனர்.


 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணப்பெண் மஞ்சுளாதேவியை தனியாக உட்கார வைத்து பேசிய காவல் துறையினர், அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


கோவிந்தராஜ் மணப்பெண்ணிற்கு வாங்கி கொடுத்து இருந்த நகைகள் மற்றும் தாலி போன்றவற்றை வாங்கி கோவிந்தராஜிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.


காதல் மனைவியைப் பிரித்து வைத்ததால் மனமுடைந்த நிலையில் கோவிந்தராஜ் இருந்துள்ளார். மேலும் பெண் வீட்டார் தரப்பிலிருந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை கோவிந்தராஜ் வீட்டின் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிய தாலியைக் கழற்றிய காதலி: புதுமாப்பிள்ளை தற்கொலை Reviewed by Thilaks on 20:45:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.