Top Ad unit 728 × 90

Breaking News

random

ஒன்றரை வயது மகனுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்....

கொரோனா ஊரடங்கால் அண்மைக்காலமாக தமிழகத்தில் தற்கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


அந்தவகையில் சென்னை புழல் அடுத்த காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார், இவருடைய மனைவி பாக்கியலட்சுமி.  இவர்களுக்கு ஒன்றரை வயதில் மித்ரன் என்ற மகன் உள்ளான்.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி குழந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கணவரான ரஞ்சித் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி கணவர் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் தனது ஒன்றரை வயது மகனுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த புழல் போலீசார் இருவரது உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ரஞ்சித் குமார் மற்றும் பாக்கியலட்சுமியின் மாமியார் சாந்தி ஆகிய இருவரும் பாக்கியலட்சுமியை வரதட்சணை கொடுமை செய்துவந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


ஒன்றரை வயது மகனுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்.... Reviewed by Thilaks on 21:15:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.