கெயில்,ராகுல் தாண்டவம்-அடிவாங்கிய பெங்களூர்
ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. விராட் கோலி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பெங்களூர் அணி 18 ஓவர் முடிவில் 137 ரன்களே எடுத்திருந்தது. 20 ஓவரில் 171 ரன்கள் குவித்தது. கிறிஸ் மோரிஸ் 8 பந்தில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி 78 ரன்கள் எடுத்தனர். மயங்க் அகர்வால் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ராகுலுடன் கிறிஸ் கெயில் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர். கிறிஸ்கெயில் 53 ஓட்டங்களையும் ராகுல் ஆட்டமிழக்காது61 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை பெற்றுக் கொண்டனர்.

No comments: