Top Ad unit 728 × 90

Breaking News

random

பிரபல கிரிக்கட் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமா் குல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


இதன்மூலம் அவருடைய 17 ஆண்டுகால சா்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.


36 வயதான உமா் குல் பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 163 விக்கெட்டுகளையும், 130 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி 179 விக்கெட்டுகளையும், 60 டி20 ஆட்டங்களில் விளையாடி 85 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளாா்.


இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ஓய்வு அறிவிப்பில், நீண்ட யோசனைக்குப் பிறகு நன்றாக சிந்தித்து கனத்த இதயத்துடன் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன்.

கிரிக்கெட் நான் எப்போதுமே நேசிக்கும் ஒரு விஷயம். இப்போது அவையனைத்தும் முடிவுக்கு வந்திருக்கிறது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.


பிரபல கிரிக்கட் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு Reviewed by Thilaks on 21:26:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.