Top Ad unit 728 × 90

Breaking News

random

கொடிகாமத்தில் பயங்கரக் கொள்ளை!

தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இச்சம்பவம் நேற்று(12) இரவு 8.30 மணியளவில் கச்சாய் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வயோதிபர்களான கணவன் மணைவி வசித்து வந்த வீட்டில் நேற்று இரவு பல பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளது.


முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு வீடு புகுந்த இனந்தெரியாத மூவர் வீட்டில் வசித்த கணவன், மனைவியை ஒரீடத்தில் கட்டிப்போட்டு இருவரின் வாய்களையும் துணியால் கட்டிவிட்டு வீட்டிலிருந்த தாலிக்கொடி உட்பட பல நகைகளை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதில் 10 பவுண் தாலிக்கொடியும், 4 பவுண் சங்கிலியும், 1 பவுண் மோதிரமும், 3/4 பவுண் தோடும் மற்றும் 25000 ரூபா பணமும் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கொடிகாமத்தில் பயங்கரக் கொள்ளை! Reviewed by Thilaks on 08:21:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.