Top Ad unit 728 × 90

Breaking News

random

ஹர்திக் பாண்டியா மிரட்டல்;ஸ்டோக்ஸ் வானவேடிக்கை-ராஐஸ்தான் அபார வெற்றி

 ஐ.பி.எல் 2020 தொடரின் 45-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


ஆரம்ப வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்  ஆல்ரவுண்டரும் அதிரடி ஆட்டக்காரருமான ஹர்திக் பாண்டியா இறுதி ஒவர்களில் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 60 ரன்கள் விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் விளாசியது.


இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடினார். உத்தப்பா 13 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 11 ரன்னிலும் அவுட்டாகினார்.


இவர்களை தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டோக்ஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஹர்திக் பாண்டியா மிரட்டல்;ஸ்டோக்ஸ் வானவேடிக்கை-ராஐஸ்தான் அபார வெற்றி Reviewed by Thilaks on 06:52:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.