Top Ad unit 728 × 90

Breaking News

random

ராஐஸ்தான் மிரட்டல்-பஞ்சாப் படு தோல்வி


 ஐ.பி.எல் தொடரின் 50-வது போட்டியில் ராஜஸ்தான் அணியும் பஞ்சாப் அணியும் மோதின.முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களைக் குவித்தது.கெயில் அதிகபட்சமாக 99 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.


186 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ராபின் உத்தப்பா களமிறங்கினர். பென் ஸ்டோக்ஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தநிலையில், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார்.


அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சனுமும் தொடக்க முதலே அதிரடியாக ஆடினார். மறுபுறம் நிதானமாக ஆடிய உத்தப்பா 30 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து,சாம்சனும் 25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்மித், பட்லர் இணை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.


17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஸ்டீவன் ஸ்மித் 20 பந்துகளில் 31 ரன்களுடனும், பட்லர் 11 பந்துகளில் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ராஐஸ்தான் மிரட்டல்-பஞ்சாப் படு தோல்வி Reviewed by Nila on 08:06:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.