அமெரிக்க கொடியோடு நாடாளுமன்றம் வந்த எம்பி
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சஜித் அணி எம்பி நலின் பண்டார அமெரிக்க தேசிய கொடியை சபையில் உயர்த்திக் காட்டி, ‘எதிர்காலத்தில் இந்த கொடிக்கு கீழ்தான் அனைவரும் செயற்ட வேண்டிவரும்.’ என்று கூறி 20வது அரசியலமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதுவரை காலமும் சிங்கம்போல் செயற்பட்ட சிலர் தற்போது ஒருசில வரப்பிரசாதங்களுக்காக இரட்டை பிரைஜா உரிமையை ஆதரிக்க முன்வந்திருக்கின்றனர். இவர்களின் இந்த செயல் வெட்கப்படவேண்டியதொன்றாகும்.
அத்துடன் இரட்டை பிரைஜா உரிமையை மீண்டும் கொண்டுவருவதன் மூலம் அமெரிக்க பிரைஜா உரிமை உள்ள பசில் ராஜபக்ஷ்வை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரவே முயற்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க கொடியோடு நாடாளுமன்றம் வந்த எம்பி
Reviewed by Thilaks
on
19:06:00
Rating:
No comments: