தவானின் சதம் வீண்-நிக்கோலஸ் பூரன் வான வேடிக்கை
ஐ.பி.எல் தொடரின் 38-வது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் இரண்டாவது முறை சதம் கடந்து சாதனை படைத்தார்.
பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார் அடுத்து வந்தார் கெயில் அதிரடியாக ஆடிய அவர், 13 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆடமிழந்தார். மயங்க் அகர்வாலும் 5 ரன்களில் ரன் அவுட்டானர்.
நிக்கோலஸ் பூரன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்
அதிரடியாக ஆடிய பூரன் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம், மேக்ஸ்வெல் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அவர், 24 பந்துகளில் 32 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
தீபக் ஹூடா 15 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதன்மூலம் புள்ளிப் பட்டியில் பஞ்சாப் அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

No comments: