Top Ad unit 728 × 90

Breaking News

random

நொருக்கித்தள்ளிய வில்லியர்ஸ்-பெங்களூர் அபார வெற்றி

 ஐ.பி.எல் தொடரின் 33-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தானி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


 ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து சாஹல் பந்துவீச்சில் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 9 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 24 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.


 36 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித் 1 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசி 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.


 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக படிகல், பின்ச் களமிறங்கினர். பின்ச் 14 ரன்னில் ஆட்டமிழந்தார் படிகல் 35 ரன்னிலும், கோலி 43 ரன்னிலும் அவுட்டாகினர்.


பெங்களூரு அணியின் வெற்றி கேள்விக்குறி ஆன நிலையில் அதிரடி வீரர் டி-வில்லியர்ஸ் அணியை தோல்வியில் இருந்து மீட்டார். இறுதி ஓவர்களில் தனியாளாக அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 55 ரன்கள் விளாசி பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.


நொருக்கித்தள்ளிய வில்லியர்ஸ்-பெங்களூர் அபார வெற்றி Reviewed by Thilaks on 20:01:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.