சென்னையை நொருக்கிய மும்பை-நாடு திரும்பும் தோனி அணியினர்
நேற்று சார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 41வது ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வா, ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பும்ராவின் வேகத்தில், நாராயணன் ஜெகதீசன், அம்பத்தி ராயுடு ஆகியோர் வீழ்ந்தனர்.
டுப்ளசிஸ் 1 ரன்னிலும், ஜடேஜா 7 ரன்களிலும், தோனி 10 ரன்களிலும் நடையை கட்டினர். இளம்வீரர் சாம் கரன் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டு அரைசதம் அடித்தார்.
இதனையடுத்து சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது.
115 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களின் அதிரடியால் 12.2 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 116 ரன்களை எட்டி அபார வெற்றி பெற்றது. இஷன் கிஷன் 68 ரன்களுடனும் டி காக் 46 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

No comments: