போக்குவரத்து பொலிசார் உட்பட6 அதிகாரிகளுக்கு கொரோனா
பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவிக்கின்றார்.
பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஏற்கனவே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
போக்குவரத்து பொலிசார் உட்பட6 அதிகாரிகளுக்கு கொரோனா
Reviewed by Nila
on
19:29:00
Rating:

No comments: