யாழில் இருந்து 905 கி.மீ.தொலைவில் ஒரு தீவிர தாழமுக்கம்-கடும் எச்சரிக்கை
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு அவசர அறிவிப்பு
இலங்கையின் தென்கிழக்கே யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கி.மீ.(489 கடல் மைல்) தொலைவில் ஒரு தீவிர தாழமுக்கம் உருவாகியுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசைநோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தாழமுக்கமானது எதிர்வரும் 23.11. 2020 அன்று கிழக்கு கடற்கரைக்கு அண்மித்து நகர்ந்து 25.11.2020 மற்றும் 26.11.2020 காலப்பகுதியில் வடக்கு மாகாணத்திற்கு அண்மித்தும் காணப்படும்( திகதிகளில் மாற்றங்கள் நிகழலாம் ஏனெனில் தற்போதைய நிலைமையிலேயே இந்த எதிர்வு கூறல் உள்ளது).
இதனால் எதிர்வரும் 23.11.2020 இலிருந்து பரவலாக மழை கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு கிடைக்க தொடங்கும். எனினும் கிழக்கு மாகாணத்திற்கு 23 மற்றும் 24ம் திகதிகளில் கனமழையும் கடும் வேகத்தில் காற்றும் வீசும். வடக்கு மாகாணத்தில் 24, 25 மற்றும் 26ம் திகதிகளில் கனமழையும் கடும் வேகத்தில் காற்றும் வீசும்.
நாளை (22.11.2020) முதல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். கண்டிப்பாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்க்கவும். தற்போதைய நிலையில் தாழமுக்கமாக காணப்படும் இந்த தாழமுக்க நிலைக்கு மறைவெப்ப சக்தி கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் இது சில சமயம் புயலாகக் கூட மாறலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: