Top Ad unit 728 × 90

Breaking News

random

ஊரடங்கை எதிர்த்து கொழும்பு மக்கள் ஆர்ப்பாட்டம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்த்து கொழும்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம் முழுமையாக இழக்கப்பட்டுள்ளதால். அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரியுள்ளனர்.


மோதரை, இப்பாவத்தை பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.


அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணம் தமது குடும்பத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாமையால் தாம் பட்டினியை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.


அரசாங்கம் உடனடியாகத் தமக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறு குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் தொடரும் ஊரடங்கினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் உரிய அதிகாரிகளின் கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊரடங்கை எதிர்த்து கொழும்பு மக்கள் ஆர்ப்பாட்டம்! Reviewed by Nila on 16:28:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.