Top Ad unit 728 × 90

Breaking News

random

இளம்குடும்பஸ்தரை வெட்டிக் கொன்ற இளம்பெண்!; முள்ளியவளையில் கொடூரம்!

 இளம்குடும்பத் தலைவர் ஒருவர், குடும்பப் பெண் ஒருவரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு, முள்ளியவளையில் நடந்துள்ளது.


முறிப்புக் கிராமத்தில் நேற்று இரவு நடந்த இந்தச் சம்பவத்தில், ஜெ.நிரோசன் (வயது-32) என்பவரே உயிரிழந்துள்ளார்.


இருவருக்கு இடையே நடந்த மோதல் ஒன்றில் ஒரு தரப்புக்கு ஆதரவாகக் களமிறங்கிய இளம் குடும்பப் பெண் நடத்திய தாக்குதலில் நிரோசன் உயிரிழந்துள்ளார்.


இவரது தலையில் இரு வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன என்றும், தாக்குதல் நடத்திய பெண் சரணடைந்துள்ளார் என்றும் முள்ளியவளைப் பொலிஸார் தெரிவித்தனர்


இளம்குடும்பஸ்தரை வெட்டிக் கொன்ற இளம்பெண்!; முள்ளியவளையில் கொடூரம்! Reviewed by Nila on 17:55:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.