Top Ad unit 728 × 90

Breaking News

random

மரண பயத்தைக் காட்டிய வில்லியம்சன்-டெல்லி அபார வெற்றி

 ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் 2-வது போட்டியில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதனையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கவீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரியன் கார்க் களமிறங்கினர். வார்னர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.


அடுத்து வந்த கார்க்கும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மனிஷ் பாண்டே 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 


மறுபுறம், கேன் வில்லியம்சன் தனது அதிரடியால் அணியைச் சரிவிலிருந்து மீட்டார். வில்லியம்சன் டெல்லி வீரர்களின் கண்ணில் மரண பயத்தை காட்டி விட்டார்.


வில்லியம்சன் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 63 ரன்கள் குவித்திருந்தநிலையில், ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.


அடுத்து  சமித்தும் 33 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் அணி எடுத்தது. அதனையடுத்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது.


மரண பயத்தைக் காட்டிய வில்லியம்சன்-டெல்லி அபார வெற்றி Reviewed by Thilaks on 05:44:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.