Top Ad unit 728 × 90

Breaking News

random

கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகள் அட்டகாசம்-கண்டு கொள்ளாத கடற்படை

 அண்மை நாட்களாக இலங்கை கிழக்கு கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் அத்துமீறும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


இதனால் கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கேள்வி குறியாகி உள்ளது.


இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்புக்குள் அத்துமீறி தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு எமது கடல் வளத்தை சூரையாடும் செயற்பாடு நடைபெற்று வருகிறது.


இன்றும் காலையில் இருந்து மாலை வரை இருபதுக்கும் மேற்பட்ட இந்திய இழுவைப்படகுகள் கரைக்கு அண்மையாக வந்து மீன்பிடித்து கொண்டிருக்கின்றன.


இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.பலமுறை கடற்படையினருக்கு அறிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததே அவர்கள் கரைக்கு அண்மையாக வந்து தொடர்ந்து மீன்பிடிக்க காரணமென மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


நேற்றைய தினமும் மாதகல்,மாரீசன் கடற்கரைப் பகுதிகளில் இந்திய மீனவர்களினால் உள்நாட்டு மீனவர்களின் வலைகள் இழுத்துச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது


கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகள் அட்டகாசம்-கண்டு கொள்ளாத கடற்படை Reviewed by Thilaks on 16:13:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.