கைத்துப்பாக்கியோடு நாமல்-வைரலாகும் புகைப்படம்
நாமல் ராஜபக்ச துப்பாக்கியுடன் பயணிக்கும் புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
விளையாட்டுத்துறை அமைச்சரும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச துப்பாக்கியுடன் பயணிப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகனமொன்றை அமைச்சர் செலுத்தும் சந்தர்ப்பத்தில் வாகனக் கதவில் உள்ள கையில் கைத்துப்பாக்கி இருப்பதுபோல புகைப்படமே அதுவாகும்.
எனினும், கடந்த 6 வருடங்களுக்கு முன்பதாக இப்புகைப்படம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தரப்பு இணையத்தளங்கள், விளக்கங்களை வெளியிட்டு வருகின்றன.
அத்துடன் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அரசாங்க அனுமதியின் கீழ் கைத்துப்பாக்கி ஒன்றை தற்பாதுகாப்புக்காக வைத்திருக்க அனுமதியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கியோடு நாமல்-வைரலாகும் புகைப்படம்
Reviewed by Thilaks
on
18:24:00
Rating:

No comments: