அம்மா சாவது எப்படி? புலமைப்பரீட்சையில் சித்தியடையாத சிறுமி தாயிடம் கேட்ட கேள்வி
அம்மா சாவது எப்படி? நான் சாவப்போகிறேன் என வவுனியா சிறுமி ஒருவர் தன் தாயிடம் கேட்ட சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
இலங்கையின் புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன,
இந்த நிலையில் குறித்த புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை குடும்பத்தார் உறவினர்களென பலரும் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வவுனியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் குறித்த புலமைப்பரீட்சையில் சித்தியடையவில்லை.
இதனால் அந்த சிறுமி மற்றவர்களின் கேள்விகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் போல, அதனால் நேற்று மாலை தன் தாயிடம் சென்று எனக்கு வாழ பிடிக்கவில்லை எப்படியம்மா சாகிறது, நான் சாகப்போகிறேன் என கூறியுள்ளார்.
மகளின் கேள்வியால் நொறுங்கிப்போன தாய் ஏனம்மா இப்படி கேட்கிறாய் இது பெரிய பரீட்சையெல்லாம் இல்லை, நீ இதைவிட பெரிய ஆளாகவருவாய் என ஆறுதல் சொல்லியுள்ளார்.
இந்த சம்பவத்தினை தாயாரின் நண்பரொருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்
No comments: