மும்பை அதிரடி டெல்லியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தேர்வு
இந்தியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் முதலாவது தகுதி (Qualifier) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது.
இஷான் கிஷான் 56 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தார்,மேலும் சூரியகுமார் யாதவ் (51), குயின்ரன் டி கொக் (40), ஹார்டிக் பாண்டியா (37) ஓட்டங்களை பெற்றனர். டெல்லி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் (3) விக்கெட்களை வீழ்த்தினார்.
201என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது.
அணி சார்பில் மார்கஸ் ஸ்டோனிஸ் (65), அஸ்கர் படேல் (42) ஓட்டங்களை பெற்றனர். மும்பையின் பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா (4) விக்கெட்களை கைப்பற்றினார்.
டெல்லி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை வந்த வேகத்திலையே பும்ராவும் பொல்ட்டும் ஆடுகளம் விட்டு அகற்றினர்.
57 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்ற மும்பை அணி ஆறாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

No comments: