Top Ad unit 728 × 90

Breaking News

random

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பறிமுதல்!

 தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது


தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை ஓரத்தில் உள்ள முள் புதர் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக ஒரு மூட்டை    மறைத்து வைக்கப்பட்டிருந்தது அதனை எடுத்து சோதனை செய்தபோது அதில் இலங்கை கடத்துவதற்காக நோய் எதிர்ப்பு  மருந்துகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கடலோர காவல் படையினர் அதனை மீட்டு மண்டபம் கடலோர காவல் படை முகாமுக்கு எடுத்து வந்து சோதனை செய்ததில் மூட்டையில் 1200 மருந்து அட்டைகளில் மொத்தமாக 6 ஆயிரம்  மருந்து பாட்டில்கள்இருந்துள்ளது

மருந்து குறித்து மருத்துவத்துறையினரிடம் விசாரித்த போது இந்த மருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மருந்தின் இந்திய மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் எனவும் சர்வதேச இலங்கை ரூபாயின் மதிப்பு சுமார் 14 லட்ச ரூபாய் என இருக்கலாம் என இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.





இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பறிமுதல்! Reviewed by Nila on 11:04:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.