Top Ad unit 728 × 90

Breaking News

random

இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர் நிறுவனம்! என்ன காரணம் தெரியுமா?

 இந்தியாவின் பகுதியாகவுள்ள லடாக்கை சீனாவின் ஒரு பகுதி போல் தவறாக குறிப்பிட்டதற்காக ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.


அது குறித்து, ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்த நிலையில் இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளதாக தரவுப் பாதுகாப்பு வரைபுக்கான பாராளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.


அது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தங்களிடம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தவறு ஏற்பட்டதை ஒப்புக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அந்நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அதனைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர் நிறுவனம்! என்ன காரணம் தெரியுமா? Reviewed by Nila on 11:35:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.