பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து கலக்கிய நயன்தாரா!! நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தற்போது வெளிவந்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வரும் திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
இந்த நிலையில் இன்று நயன்தாரா நடித்துவரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி போல் நடித்துள்ளார் என்பது டீசரை பார்த்ததும் புரிகிறது. மேலும் இந்த திரைப்படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக எடுக்க பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நயன்தாரா உட்பட மேலும் அஜ்மல், மணிகண்டன் போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
இதோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீஸர் வீடியோ.

No comments: