Top Ad unit 728 × 90

Breaking News

random

கடலில் மிதந்த மர்மப்பொதி; எடுத்து பிரித்தவர் மயக்கம்!

 கடலில் மிதந்த மர்மப் பொருள் ஒன்றை பிரித்த நபர் அதிலிருந்து வெளியேறிய காற்றை சுவாசித்ததால் மயங்கி வீழ்ந்த சம்பவம் ஒன்று இன்று (18) இடம்பெற்றுள்ளது.


வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியைச் சேர்ந்த தியாகராசா அன்ரன் (வயது-51) என்பவரும் அவருடைய மைத்துணரும் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.


கரையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் மர்மப் பொருள் ஒன்று மிதந்து வந்துள்ளது. எண்ணைக் கான் போன்று காணப்பட்ட குறித்த பொருளை அன்ரன் திறந்து பார்த்துள்ளார். அதிலிருந்து வெளியேறிய மர்மப் புகையை நுகர்ந்ததை அடுத்து அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.


இதனை அடுத்து மைத்துனர் அவரை கரை சேர்த்து மருத்துமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்


கடலில் மிதந்த மர்மப்பொதி; எடுத்து பிரித்தவர் மயக்கம்! Reviewed by Nila on 19:17:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.