கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா! பாடசாலைகள் மூடப்பட்டன!
கிளிநொச்சி தொண்டமான் நகர் பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
கொரோனா இனங்காணப்பட்டவர் 72 வயதுடைய வயோதிபர் இவர் “கிளிநொச்சி 155ஆம் கட்டை வைலஸடியில் உள்ள ஒயில் கடை நடத்தும் வியாபாரி. அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடைக்கு அண்மையாக உள்ள கடைகளை மூடி தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா! பாடசாலைகள் மூடப்பட்டன!
Reviewed by Nila
on
20:47:00
Rating:

No comments: