12பேர் கொரோனாவால் சற்றுமுன் பலி-
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் நாளுக்கு நாள் புதிதான தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா,ரஷ்யா,சீனா போன்ற நாடுகள் தடுப்பூசி கண்டு பிடிக்கும் நோக்கோடு மும்முரமாக செயற்பட்டு வரும் நிலையில் இந்தியாவும் தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் தமிழ் நாட்டில் எல்லை மீறிய கொரோனா தொற்று அண்மை நாட்களாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் 957பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகமெங்கும் கொரோனா பெருந்தொற்றால் இன்று ஒரே நாளில்12பேர் உயிரிழப்பு..!
கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமாகி வீடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இன்று 1065பேர் பூரண குணம்பெற்று வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

No comments: