17வயது கல்லூரி மாணவியை கடத்தி சென்று வாலிபர் செய்த செயல்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 17 வயது கல்லூரி மாணவியை வாலிபர் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் என்பவர் பருவாச்சி நாயக்கனூர் பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை கடந்த 20ஆம் தேதி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
கடத்தி சென்ற மாணவியை குறித்த வாலிபர் கட்டாய திருமணம் செய்துள்ளார். மாணவியை காணவில்லை என பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக இளைஞர் விக்னேஷை கைது செய்துள்ளனர்.
17வயது கல்லூரி மாணவியை கடத்தி சென்று வாலிபர் செய்த செயல்
Reviewed by Thilaks
on
08:08:00
Rating:
No comments: