Top Ad unit 728 × 90

Breaking News

random

இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்-3பேர் கைது

 ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் கோவிலைத் தாக்கி  மதக்கலவரத்தைத் தூண்டிவிட முயற்சித்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையை அடுத்து மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அவர்களிடமிருந்து ஆறு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி முஸ்தபா இக்பால் கான் மற்றும் அவனுடைய சகோதரன் முர்தாசா இக்பால் ஆகியோர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.


இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்-3பேர் கைது Reviewed by Thilaks on 11:18:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.