யாழில் சற்றுமுன் 9பேருக்கு கொரோனா உறுதி-தடைப்படுமா புதுவருடம்?
யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணி தொடர்பால் இன்று (30) இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 127 ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீடத்தின் இன்றைய ஆய்வுகூட பரிசோதனையின் போது உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவை சேர்ந்த 8 பேர், சண்டிலிப்பாய் பிரிவை சேர்ந்த ஒருவர் என 9 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
புதுவருடத்திற்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் யாழில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனைத்து ஆடம்பர கொண்டாட்டங்கள் தடைப்படலாமென கூறப்படுகிறது.
யாழில் சற்றுமுன் 9பேருக்கு கொரோனா உறுதி-தடைப்படுமா புதுவருடம்?
Reviewed by Thilaks
on
20:21:00
Rating:

No comments: