வைத்தியசாலைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு-பயங்கர வாதிகளினதா என ஆராய்வு!
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் முந்திரியத்தோட்டம் ஒன்றில் மரத்தின் கீழ் பாதுகாப்பாக பொலித்தீன் பை ஒன்றினால் சுற்றி வைக்கப்பட்டிருந்த ரி 81 ரக துப்பாக்கி ஒன்றையும், 49 ரவைகளையும், 2 மகசீன்களையும் இன்று மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையில் பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள முந்தியரிய தோட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மரம் ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்டுள்ளன.
இவ்வாறு துப்பாக்கி மீட்கப்பட்ட முந்திரிகைத் தோட்ட உரிமையாளரான ஆசிரியர் மீது பல தரப்பட்ட கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு-பயங்கர வாதிகளினதா என ஆராய்வு!
Reviewed by Nila
on
08:14:00
Rating:
No comments: