யாழில் சற்று முன்னர் வாள் வெட்டு! மூவர் வைத்தியசாலையில்!
கரணவாய் முதலைக்குழி பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் ஒரு பெண் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் சற்று முன்னர் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரணவாய் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் சஜிந்தன் (வயது 29), சண்முகம் சிவஞானசுந்தரம் (வயது 55), தேவராசா ரஞ்சிதா (வயது 35) ஆகியோரே வெட்டுக் காயங்களுக்கு உட்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சஜிந்தன் கையில் வெட்டுக் காயங்களுடனும், சிவஞானசுந்தரம் தலையில் வெட்டுக் காயங்களுடனும், ரஞ்சிதா நெஞ்சு மற்றும் பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக் காயங்களுடனும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் இன்னமும் நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் எவரும் முறைப்பாடு பதிவு செய்யவில்லை எனவும் பொலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சகோதரர்களுக்கிடையிலான குடும்பத் தகராறே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments: