புதிய தொழிலில் இறங்கிய காஜல்-ஒன்லயின் பிசினஸ்
கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி நடிகை காஜல் அகர்வாலுக்கும், கௌதம் கிட்சலு என்ற தொழில் அதிபருக்கும் திருமணம் நடைபெற்றது. மேலும் காஜல் திருமணத்திற்கு பிறகும் தனது கேரியரை நிறுத்த போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
தற்போது நடிகை காஜல் அவரது கணவருடன் இணைந்து, புதிய தொழில் ஒன்றை தொடங்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்று திரும்பிய காஜல் ‘இந்தியன்-2’, ‘ஆச்சார்யா’, ‘கோஸ்டி’ போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அதேபோல், திருமணத்திற்குப் பிறகு காஜல் தொழிலதிபராகவும் அவதாரம் எடுத்துள்ளாராம். அந்தவகையில் நடிகை காஜல் வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை விற்பனை செய்வது, வீட்டை அலங்கரித்து தருவது போன்ற புதிய தொழிலை தனது கணவருடன் சேர்ந்து ஆரம்பித்துள்ளாராம்.
புதிய தொழிலில் இறங்கிய காஜல்-ஒன்லயின் பிசினஸ்
Reviewed by Thilaks
on
09:49:00
Rating:

No comments: