ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென அவரது வீட்டுக்கு முன் ரசிகர்கள் செய்யும் வேலை
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்திருந்தநிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்துவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடுவதால், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரசாரத்தின் போது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் தன்னை நம்பி தன் கூட வந்து அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
” என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேம். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
என்று தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும் என்றும், தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
ஆனால், சில ரசிகர்கள், அவரது வீடு முன் அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: