Top Ad unit 728 × 90

Breaking News

random

பிரசவம் நெருங்கும் நேரத்தில் மனைவி கணவனுடன் தற்கொலை

 திருப்பூர் அருகே 8 மாத கர்ப்பிணி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதியில் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், மீனாட்சி நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி பெயர் கவிதா. 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.


குறித்த பெண் திடீரென தனது கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


தங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என அவர்கள் எழுதி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பிரசவம் நெருங்கும் நேரத்தில் மனைவி கணவனுடன் தற்கொலை Reviewed by Thilaks on 11:08:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.