Top Ad unit 728 × 90

Breaking News

random

பெண்களிடம் அத்துமீறிய நபரை தட்டிக் கேட்டவருக்கு ஏற்பட்ட கதி

 பெண்களை ஈவ் டீசிங் செய்ததை தட்டிக்கேட்டதால், தேங்காய் வியாபாரியை கத்தியால் குத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தேவக்கோட்டை-கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான அசாருதீன் என்ற இளைஞர், பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்கள் மீது இருசக்கர வாகனத்தை மோதுவது போல வந்து, ஈவ் டீசிங் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.


  அசாருதீன் பெண்களுக்கு இப்படி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அசாருதனின் இந்த செயலை, பேருந்து நிலையத்தில் தேங்காய் கடை வைத்திருக்கும் சொர்ணக்காளை என்பவர் அடிக்கடி கவனித்துள்ளார்.


நேரடியாகவே குறித்த இளைஞனிடம் சென்று எடுத்துரைத்துள்ளார் .இதனால், கோபமடைந்த அசாருதீன், சொர்ணக்காளையை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 


படுகாயமடைந்த சொர்ணக்காளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்வம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ராமநாதபுரம் அருகே தொண்டி பகுதியில் பதுங்கியிருந்த அசாருதீனை கைது செய்துள்ளனர்.


பெண்களிடம் அத்துமீறிய நபரை தட்டிக் கேட்டவருக்கு ஏற்பட்ட கதி Reviewed by Thilaks on 18:22:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.