தற்கொலை செய்வதாக மிரட்டிய கணவன்-லைட்டர் தவறுதலாக தட்டப்பட்டதால் இரண்டு உயிர்கள் தீயில் நாசம்
கன்னியாகுமரியில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய கணவன் , மனைவியை காப்பாற்ற முயன்ற போது இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெய்யாற்றங்கரை நெல்லிமூடு பகுதியை சேர்ந்த ராஜன் இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்தது. நீதிமன்றத்தில் ராஜனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் போலீசார் ராஜன் வசித்த வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்தனர்.
அப்போது, அதிகாரிகளிடத்தில் தான் மேல் முறையீடு செய்யவும் மாற்று வீடு தேடவும் சாவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் ராஜனின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
தொடர்ந்து தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே வந்த ராஜன், இருவர் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.
உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி ராஜன் லைட்டரை எடுத்து பற்ற வைத்தார். இதை பார்த்த அருகிலிருந்த போலீஸ்காரர் ஒருவர் லைட்டரை தட்டி விட முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ராஜன் உடல் மீது தீ பற்றிக்கொண்டது. அருகிலிருந்த ராஜனின் மனைவி மீதும் தீ பற்றியது . வேதனை தாங்காமல் இருவரும் அலறினர்.சிறிது நேரத்தில் தீயில் கருகி தரையில் சாய்ந்தனர்.
No comments: