மன்னாரில் காணாமற்போன கிராம சேவையாளர்!
மன்னார் – நானாட்டான், அருவியாற்று பகுதியில் குளிக்கச்சென்ற கிராம சேவையாளர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.
இன்று நண்பகல் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரே காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமற்போனவரை கடற்படையினரும் கிராம மக்களும் இணைந்து தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மன்னாரில் காணாமற்போன கிராம சேவையாளர்!
Reviewed by Nila
on
19:02:00
Rating:

No comments: